9,491 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை மீள் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசித் தேதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஆண்டின் ஆரம்பத்தில் வெளியானது. ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வை எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 4,45,345 பேர் எழுதவில்லை. 15,91,429 பேர் எழுதினர்.

சுமார் 16 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.

நவம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம்

தேர்வில் அதிக கட் ஆஃப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் என்பதால், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய நவம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

எனினும் அதில் சிலர் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை. தொடர்ந்து தற்போது அவர்களுக்கு சான்றிதழ்களை மறு பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 4 தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை மீள் பதிவேற்றம் செய்ய இன்றே (டிசம்பர் 21) கடைசித் தேதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

pic.twitter.com/1kY7GsDs3Q

— TNPSC (@TNPSC_Office) December 21, 2024

உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்படாது

டிசம்பர் 21-ம் தேதிக்குள் மீண்டும் சரியான முறையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் உடனே சரியான முறையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ தளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.