அரசு பணிக்கு தயாராகும் தேர்வர்கள்

அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரின் கனவாகும். அந்த வகையில் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் பணம் பட்டி இரவு பகலாக பலரும் படித்து வருகிறார்கள். அதே நேரம் ஏழை எளிய மாணவர்களால் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதிஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group II/IIA தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC இலவச பயிற்சி வகுப்பு

இத்தேர்விற்கு 09.09.2026 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை. பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 03.09.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

விண்ணப்பம் பதிவிறக்கம்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை பின்வரும் கூகுள் படிவத்தில் https://forms.gle/z3LzaGSpNeA1djJ76 நிரப்புமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள் RRB, TNPSC, TNUSRB SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது. மென் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி.?

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32. கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள். மேலும், விவரங்களுக்கு,
[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதிஹெலன் தெரிவித்துள்ளார்.