TN Roundup: பொங்கலுக்கு சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்.. எகிறிய வெள்ளி விலை.. 10 மணி செய்திகள் இதோ!

3 months ago 9
ARTICLE AD

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று   பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூக்கள் விலை கடும் உயர்வடைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்வதால் நெடுஞ்சாலை மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தொடர்ந்து 6வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6.90 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 10 விமானங்கள் தாமதமாகவும், 7 விமானங்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 600 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.307 ஆக விற்பனையாகிறது.

பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை மதுராந்தகத்தில் நடத்த ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்காக பூமி பூஜை| போடும் நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு ஆடு ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

Read Entire Article