கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் சுற்றவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை - சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தாய் மதுபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள கணவர் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் போதையில் சண்டையிட்ட பயணிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,780க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

நாமக்கல், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை. தலைமை அரசு மருத்துவமனைக்குள் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதியடைந்தனர். அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற 7 வயது சிறுவன் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் 10ஆம் தேதி வேடநத்தத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. நஷ்டத்தை மட்டும் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் மோடி பெருநிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார் என காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 22ஆம் தேதி மாலை மெரினாவில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுவனின் உடல் நேற்று இரவு துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 4வது முறையாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத்துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.