இன்று இரவு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று இரவு 1 மணிவரைக்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/pLner6WW58

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 17, 2024

அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை!

மாலத்தீவு மற்றும் மத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை நிலவரம்:

இந்நிலையில் இன்று தமிழகத்தில், அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் படுகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும். காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18-11-2024 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19-11-2024 முதல் 23-11-2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்: நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய ;லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

pic.twitter.com/NKx169DC3M

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 17, 2024