தீபாவளி திங்களன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை:

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

நாளை(19-10-2025)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

முன்பே உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தென், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுடன் சேர்ந்து சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது தீவிரமடைந்து அதே பகுதியில் நிலைத்து உள்ளது. இந்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மண்டலமாக மாறி, பின்னர் தெற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும் எனவும், அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.