TN Rain Alert: சென்னையை குளிர்வித்த மழை.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

2 hours ago 1
ARTICLE AD

சென்னையில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்பது பற்றிக் காணலாம்.

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 10ம் தேதியான இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜூன் 10 முதல் ஜூன் 13ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஜூன் 10ம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் ஜூன் 11ம் தேதியான தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் வங்கக்கடல் பகுதிகளில் ஜூன் 10ம் தேதியான இன்று தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.  அரபிக்கடல் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பாக   கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும்
அதனை ஒட்டிய மத்தியகிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதி செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Read Entire Article