TN Rain Alert: சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் போட்ட டிவீட்:

இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு சில நல்ல செய்தி. சீரான மழை சிறிது நேரம் தொடரும். காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றின் ஒருங்கிணைப்பு கடக்கும் பகுதிக்கு வடக்கே இருக்கும், அதனால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். முக்கிய காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று கனமழை பொழிய நமக்கு வாய்ப்பில்லை. சாதாரண மழை பெய்யலாம். நாம் பார்க்கிறபடி, காற்றின் ஒருங்கிணைப்பு பகுதி தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது. காற்றழுத்த தாழ்வு நில தரையை நோக்கி நகர்வதை பொறுத்து, 18-20ம் தேதிகளில் சென்னையில் மழை பெய்யக்கூடும். அது சாதாரண சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும், எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.