தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று (20.11.2ஒ24) இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால், கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்:

தமிழ்நாட்டில் தென் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இன்று (20.11.2024) அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.