தமிழக பொதுப்பணித் துறையில் உள்ள 760 அப்ரண்டிஸ் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? தேர்வு முறை, ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கமாகக் காணலாம்.

காலி இடங்கள்

அப்ரெண்டிஸ் பணிகளுக்கு 3 விதமான வகைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொறியியல் / தொழில்நுட்ப பட்டதாரிகள், டிப்ளமோ பட்டதாரிகள், தொழில்நுட்பப் படிப்பு அல்லாத பட்டதாரிகள் ஆகியோர் அப்ரண்டிஸ் பணிகளுக்குத் தேவைப்படுகின்றனர்.

அந்தந்த வகைகளுக்கு ஏற்றபடி சிவில், இஇஇ, ஆர்க்கிடெக்சர், B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM முடித்த பட்டதாரிகள் இதில் பங்கேற்கலாம். சிறப்பம்சமாக 2020, 2021, 2022, 2023 & 2024 ஆகிய ஆண்டுகளில் பட்டம் முடித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

ஊதியம் எவ்வளவு?

ஓராண்டுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பணியிடங்களைப் பொறுத்து ரூ.9 ஆயிரம் அல்லது ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது.

தேர்வு முறை எப்படி?

இதில் தேர்வு முறை எதுவும் கிடையாது. விண்ணப்பிக்கும்போது தகுதியாக இருக்க வேண்டிய படிப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, அவர்களுக்கு மட்டும் அழைப்பு வழங்கப்படும். பின் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? தேர்வு முறை, ஊதியம் என்பன குறித்த விரிவான அறிவிக்கையை http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: http://boat-srp.com/

இதையும் வாசிக்கலாம்: AICTE Scholarship: கல்லூரி மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவிக்கொகை; அள்ளித்தரும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி?