தமிழக அரசின் உதவித்திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதி வண்டி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தை தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் வாங்க மானிய உதவித்தொகை திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இரு சக்கர வாகனம் வாங்க மானியம்

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/-வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆவிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வாவேற்கப்படுகின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலர் / சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி.?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையிலார் நல அலுவலகங்களில் 30.6 2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்.எனவே சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த உலமாக்கள் விண்ணப்பித்து பயண்டைமமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.