தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஹெல்மெட் அணிவது தனி நபர் விருப்பம் என்று கூறியது வதந்தி என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது.

ஹெல்மெட் அணிவது கட்டாயம்:

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து விதிகளில் ஹெல்மெட் அணிவது கட்டாய விதியாக உள்ளது, மேலும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் போக்குவரத்து விதீகளில் கொண்டுவரப்பட்டது, அவ்வாறு அணியாமல் சென்றால் அதற்கு அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து விதிகளில் உள்ளது.

பரவிய வதந்தி:

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைகவசம் அணிவது அவரவர் தனிநபர் விருப்பம் என்று தெரிவித்ததாக வதந்திகள் பரவின. தவறான பரவிய தகவல் கீழ்வருமாறு:

தமிழக அரசு செய்தி: தலை கவசம் (ஹெல்மெட் ) அணிவது) உயிரின் மேல் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் எனகாவல் துறைக்கு முதல்வர் உத்தரவு... ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால். +91 83 44 606680. இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அனைத்து குரூப்பிர்க்கும் பகிரவும் என்று இவ்வாறு பரப்பட்டிருந்தது.

உண்மை என்ன?

இந்த நிலையில் தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு, இது வதந்தி என்று கூறியுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியீட்டுள்ள பதிவில்

தலைக்கவசம் அணிவது தனிப்பட்ட விருப்பம்
என்று முதல்வர் உத்தரவிட்டதாக வதந்தி! @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/CHLrFRTpnU

— TN Fact Check (@tn_factcheck) December 20, 2024

இது முற்றிலும் வதந்தியே.

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டாம் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே இந்த வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், பரவி வருவது உண்மையற்றது, பொய்யான வதந்தி என தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.