TN Election Results: ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் நிலை என்ன.? அதிமுக, தவெகவிற்கு ஷாக் கொடுத்தார்களா.?

1 month ago 5
ARTICLE AD

வாக்கு எண்ணிக்கை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்  4 கோடியே 87 லட்சத்து 99ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. தபால் ஓட்டுக்களை பொறுத்தவரை 5 லட்சத்து 80ஆயிரம் வாக்குகள் பதிவானது. இதனையடுத்து இந்த வாக்குகளை எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்போது இல்லாத வகையில் இந்த தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டியானது நிலவி வந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக தவெகவின் வருகை திராவிட கட்சிகளை அலறவைத்துள்ளது.

அதிமுக டூ திமுக

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியையடுத்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தனி அணியானது செயல்பட்டு வந்தது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வந்தனர்.  இதனையடுத்து அதிமுகவில் மீண்டும் சேர ஓ.பன்னீர் செல்வம் எவ்வளவோ முயன்றும் முடியாத நிலை உருவானது. இதனையடுத்து திமுகவில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் இணைந்தனர்.

ஓபிஎஸ் நிலை என்ன.?

இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட திமுக தரப்பும் சீட் வழங்கியது. அந்த வகையில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்கினார். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் நாராயணசாமி, தவெக சார்பில் பிரகாஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலை அரசு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக களம் இறங்கியுள்ள ஓ.பன்னீர் செல்வம் வகித்து வருகிறார்.

Tamil Nadu Election Results 2026 LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை லைவ்

வைத்தியலிங்கம் முன்னிலையா.?

இதே போல ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பாக வைத்தியலிங்கம் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் எம். சேகர், தவெக சார்பில் டாக்டர் அரவிந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் திருமுருகன் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

மனோஜ் பாண்டியன் நிலை என்ன.?

அடுத்தாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் KRP பிரபாகரன், நாம் தமிழர் கட்சி R பால்ராஜ், தமிழக வெற்றி கழகம் சார்பில் விபின் சக்கரவர்த்தி போட்டியில் உள்ளனர்.  இதில் தவெக வேட்பாளர்  முன்னிலையில் உள்ளார்.

Read Entire Article