ஒட்டுமொத்த இந்தியாவும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ளது.

தவெக ஆட்சி:

தவெக இந்த தேர்தலில் 110 தொகுதிகள் வரை முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது திமுக-வினர் மட்டுமின்றி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதைக்காட்டிலும், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவருடைய கோட்டையான கொளத்தூர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

தமிழக தேர்தல் வரலாற்றிலே முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது இது 3வது முறை ஆகும்.

1. பக்தவச்சலம்:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கொண்ட வந்த வரும் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக களமிறங்கிய காங்கிரஸின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் அப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜரத்தினமிடம் தோல்வியைத் தழுவினார்.

அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ராஜரத்தினம் 41 ஆயிரத்து 655 வாக்குள் பெற்ற நிலையில், பக்தவச்சலம் 32 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். முதலமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தது அதுவே முதன்முறை ஆகும்.

2. ஜெயலலிதா:

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை ஆவார். ஆனால், அவர் 1996ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா 50 ஆயிரத்து 782 வாக்குகள் பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுகவனம் 59 ஆயிரத்து 148 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

3. மு.க.ஸ்டாலின்:

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் கோட்டையாகவே கருதப்படும் தொகுதி கொளத்தூர். இந்த தொகுதியில் தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தார்.

மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 74 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ்பாபு 82 ஆயிரத்து 997வாக்குகள் பெற்றார். மு.க.ஸ்டாலினைக் காட்டிலும் 8 ஆயிரத்து 795 வாக்குகள் கூடுதலாக வெற்றி பெற்றார்.

முதலமைச்சர்களாக தேர்தலை எதிர்கொள்பவர்களின் தோல்வி அந்தந்த கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கும்.

Aadhav Arjuna: "கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு வெற்றி சமர்ப்பணம்.." ஆதவ் அர்ஜுனா உருக்கம்