TN Election Result: மு.க.ஸ்டாலின் முதல் சுந்தர்.சி வரை.. தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகள் வரை!

1 month ago 7
ARTICLE AD

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்த நிலையில், தமிழ்நாட்டின் நட்சத்திர வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் கீழே காணலாம்.

மு.க.ஸ்டாலின்:

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வெற்றி வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருந்தாலும் அவரது வாக்குகள் வித்தியாசம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி:

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமானவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி 7வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வாவதற்கு எடப்பாடி தொகுதியில் களமிறங்குகிறார்.

ஜோசப் விஜய்:

தவெக தலைவரும், தமிழ் திரையுலகின் பிரபலமான விஜய் முதன்முறையாக களமிறங்கும் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். முதலமைச்சர் வேட்பாளரான இவர் தனது முதல் அரசியல் களத்தையே 2 தொகுதியில் களமிறங்குகிறார்.

சீமான்:

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரான சீமான் இந்த தேர்தலிலும் தனித்து களமிறங்கியுள்ளார். இவர் கடந்த முறை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். காரைக்குடி தொகுதியில் இவருக்கும், தவெக வேட்பாளர் பிரபுவிற்கும் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்:

திமுக இளைஞரணிச் செயலாளருமான, துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து 2வது முறையாக அவர் போட்டியிடுகிறார். எதிர்கால திமுக தலைவராக கருதப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது

தமிழிசை செளந்தர்ராஜன்:

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தர்ராஜன் மயிலாப்பூரில் போட்டியிடுகிறார். தமிழிசை இதுவரை ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானதில்லை. ஆனாலும், தமிழ்நாட்டில் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக-வை வளர வைத்தத்தில் இவரது பங்கும் அளப்பரியது.

ஓ.பன்னீர்செல்வம்:

ஜெயலலிதாவின் விசுவாசி என்று கருதப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் இருந்து விலகி முதன்முறையாக திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரது இந்த முடிவிற்கு அவர் போட்டியிடும் போடிநாயக்கனூர் மக்கள் ஆதரவு அளிப்பார்களா? அல்லது தோல்வியை பரிசாக அளிப்பார்களா? என்பதை கீழே காணலாம்.

செங்கோட்டையன்:

அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த பிறகு முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார் செங்கோட்டையன். விசில் சின்னத்தில் போட்டியிடும் செங்கோட்டையனுக்கு வெற்றி கிட்டுமா? 10வது முறையாக தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராக அமர்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புஸ்ஸி ஆனந்த்:

தவெக-வின் பொதுச்செயலாளரும், விஜய் அரசியலுக்கு வருவதற்கு உறுதுணையாக தொடக்க காலம் முதல் இருப்பவருமான புஸ்ஸி ஆனந்த் தி.நகரில் களமிறங்குகிறார். விஜய்யைப் போல தவெக-வினர் மத்தியில் இவரும் பிரபலம். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இவர் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜி:

திமுக-வின் அமைச்சரவையில் தவிர்க்க முடியாத முகமாக மாறியிருப்பவர் செந்தில் பாலாஜி. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு இவர் தொகுதி மாறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக திகழும் சூழலிலே செந்தில் பாலாஜியே அதை திமுக-வின் கோட்டையாக மாற்ற நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்:

அண்ணாமலைக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக பொறுப்பெடுத்தவரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான நயினார் நாகேந்திரன் களமிறங்கும் தொகுதி சாத்தூர். இவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? சாத்தூரில் தாமரையை மலரச் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

லீமா ரோஸ்:

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான லாட்டரி மார்ட்டினின் மனைவியும், இந்த தேர்தலிலே மிகப்பெரிய பணக்கார வேட்பாளருமான லீமா ரோஸ் போட்டியிடும் தொகுதி லால்குடி. அதிமுக சார்பில் இவர் போட்டியிடும் இந்த தொகுதியில் இவருக்கு போட்டியாக தவெக-வின் குப கிருஷ்ணன் மிகவும் சவாலாக திகழ்கிறார். திமுக-வும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

எஸ்.பி.வேலுமணி:

முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் பக்கபலமாகவும் திகழ்பவர் எஸ்பி வேலுமணி. கொங்கு மண்டலத்தை அதிமுக-வின் கோட்டையாக தக்கவைத்திருப்பதில் இவரது பங்கு மிகப்பெரியதாக அமைந்துள்ளது. இவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் சூழலில் இவரது வெற்றி வாய்ப்பு எளிதாகுமா ? அல்லது சவாலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய பிரபாகரன்:

தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் மகனும், தேமுதிக-வின் எதிர்கால தலைவருமான விஜயபிரபாகரன் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். விருதுநகர மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைந்த அவர் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த தேர்தல் மூலமாக அவர் சட்டமன்ற உறுப்பினராக முதன்முறை பொறுப்பேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரேமலதா:

விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் 2வது முறையாக களமிறங்கியுள்ள சட்டமன்ற தேர்தல் இதுவாகும். திமுக கூட்டணியில் முதன்முறையாக போட்டியிடும் தேமுதிக இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்த் முதன்முறையாக எம்எல்ஏ-வான விருத்தாச்சலம் தொகுதியிலே பிரேமலதா களமிறங்கியுள்ளார்.

சுந்தர் சி:

தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனரான சுந்தர் சி திரைப்படங்களில் வரும் ட்விஸ்ட் போல திடீரென வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதிமுக வேட்பாளராக களமிறங்கியது மட்டுமின்றி பலம் வாய்ந்த வேட்பாளரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால், இந்த தொகுதி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

TN Election 2026 Results: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடு!

Read Entire Article