TN Election 2026: ஸ்டாலின், விஜய், EPS தொகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி? பெரம்பூர் Vs கொளத்தூர் எங்கே அதிகம்?

1 hour ago 1
ARTICLE AD

TamilNadu Assemblu Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொகுதிகளில் 11 மணி நிலவரப்படி, பதிவாகியுள்ள வாக்கு சதவிகித விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரேகட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை முதலே வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல், வெயிலுக்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டும் என கருதுபவர்கள் மற்றும் விஜய்க்கு ஆதரவாக குவியும் இளைஞர்கள் போன்ற காரணங்களால், காலையிலேயே வாக்குச்சாவடி மையங்களில் அதிகப்படியான வாக்காளர்கள் குவிந்தனர். இதனால், மொத்தமுள்ள 5 கோடியே 73 காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகிதம் பேர் வாக்களித்து இருந்தனர்.

11 மணி நிலவரம்:

11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45 சதவிகித வாக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 41.41 சதவிதமும், ஈரோட்டில் 41 சதவிகிதமும், சேலத்தில் 40.56 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் 35.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் வேட்பாளர்கள் தொகுதிகள் நிலவரம் என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், காலை 11 மணி நிலரப்படி 37.06 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதே சென்னை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 36.26 சதவிகித வாக்குகள் மட்டுமே தொகுதியுள்ளன. சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 39.94 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 11 மணி நிலவரப்படி 33.80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகபட்சமாக எடப்பாடியிலும், குறைந்தபட்சமாக காரைக்குடியிலும் வாக்கு சதவிகிதம் பதிவாகியுள்ளது.

Read Entire Article