தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி வெகுவிமரிசையாக திருவிழா போல நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் முறை வாக்காளர்கள் தொடங்கி பல தலைமுறை தேர்தல் கண்ட முதியவர்கள் வரை அனைவரும் ஜனநாயக கடமையாற்றினர். இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75,064 ஆக அமைக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகள் ஆகியவை வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு முன்னேற்பாடு பணிகளும் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

<iframe title="Senthil Balaji | ஓட்டு போடாத செந்தில் பாலாஜி கோவை தேர்தல் பிஸியா?உண்மை காரணம் என்ன? | Karur | DMK" src="https://www.youtube.com/embed/5USqp9ijw-U" width="805" height="453" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

போஸ்டரால் வந்த பிரச்னை

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கட்டடங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர் விவரங்கள், தேர்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண்கள் அடங்கிய பல சுவரொட்டிகள் வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. இது தற்போது பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

அதாவது பள்ளிச் சுவர்களில் தேர்தல் ஆணையம் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்று பல ஆண்டுகளாகவே சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். காரணம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி, தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு உள்ளூர் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்று பல பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதும் ஆகும்.

குழந்தைகள் விரும்பும் வகையில் அந்த ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பது பலரிடத்திலும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் தேர்தலுக்கான நடைபெற்ற பணிகள் அந்த ஓவியத்தின் அழகை கெடுத்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாற்று நடவடிக்கைகள் குறித்த தங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் புறக்கணித்துவிட்டதாக தொண்டமுத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வருத்தப்பட்டிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுவரொட்டிகளை அகற்றவும், பள்ளி வளாகங்களைச் சுத்தம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டாலும் இன்னும் பெரும்பாலான பள்ளிகளில் பணிகள் தொடங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகமே டிஜிட்டல் யுகமாக மாறி வரும் நிலையில் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு மாற்று ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தால் செய்ய முடியாதா என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் எஸ்.சந்திரசேகர் கேள்வியெழுப்பியுள்ளார். ஆசிரியர்கள் சுவரொட்டிகளை அகற்ற முயன்றாலும் அதனை முழுவதுமாக செய்ய முடியாமல் போகிறது. சுவர்களில் போஸ்டரின் மிச்சங்கள் ஒட்டியிருப்பது அதன் அழகை கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.