TN Election 2026: புறக்கணிப்பு - 974-பேரில் ஒருத்தர் கூட ஓட்டு போடலை..! நாங்குநேரியில் ஷாக் கொடுக்கும் வாக்காளர்கள்

1 month ago 6
ARTICLE AD

TN Election 2026: கடந்த மார்ச் 2ம் தேதி நடத்தப்பட்ட சாதி ரீதியிலான தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து, பெரும்பத்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்:

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆங்காங்கே சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதேநேரம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில், வாக்குப்பதிவு தொடங்கி 4 மணி நேரமாகிய பிறகும் கூட ஒருவாக்களிக்கவில்லை. அண்மையில் அந்த பகுதியில் நடைபெற்ற சாதியை படுகொலைகளை கண்டித்து இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பெரும்பத்து கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

No one turned up to cast their vote in Nanguneri Perumpathu village, where BC & SC residents boycotted election condemning the March 2 sickle attack by seven casteist history-sheeters, which left two dead & six injured. As many as 974 voters reside in the village. Residents claim… pic.twitter.com/L4L3VpnMvL
— Thinakaran Rajamani (@thinak_) April 23, 2026

290-பேரில் ஒருத்தர் கூட ஓட்டு போடலை..!

பெரும்பத்து கிராமத்தில் மொத்தம் 974 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது. அப்படி இருந்தும் இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினருடன் போலீசாரும் அங்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆவணங்களை சரிபார்த்து மை வைத்து வாக்காளர்களை வாக்களிக்க வழிகாட்டுதலை வழங்க தேர்தல் அலுவலர்களும் தயாராக உள்ளனர். இருப்பினும் கடந்த மார்ச் 2ம் தேதி சாதிய ஆணவ கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததற்கும், ஆறு பேர் காயமடைந்ததற்கும் கண்டனம் தெரிவித்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.  இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

இரட்டைக் கொலை சம்பவம்

Read Entire Article