TN Election 2026: ஓட்டு ஸ்லிப் இன்னும் கைக்கு வரவில்லையா? கவலை வேண்டாம்.. டவுன்லோட் செய்ய ஈசி டிப்ஸ்

1 hour ago 1
ARTICLE AD

ஓட்டு ஸ்லிப் வரவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வெளியூரில் இருந்தாலோ கவலைப்படத் தேவையில்லை, சுலபமாக எப்படி டவுன்லோட் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்

தேர்தல் களம்:

தமிழ்நாட்டில்  சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆகியவை கூட்டணியோடு  காண்கின்றன. அதே வேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் ஆகியவை தனித்து நிற்கின்றன.

பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள்:

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்  எனப்படும் ஓட்டு ஸ்லிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவேளை உங்கள் வீட்டிற்கு இன்னும் ஓட்டு ஸ்லிப் வரவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வெளியூரில் இருந்தாலோ கவலைப்படத் தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் சில நிமிடங்களில் உங்கள் ஓட்டு ஸ்லிப்பை நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூத் ஸ்லிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?

செயலியை பதிவிறக்கம் செய்க: முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் 'ECI App' (Voter Helpline App) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

பதிவு செய்தல்: உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, வரும் OTP மூலம் லாகின் (Login) செய்யவும்.

வாக்காளர் சேவை: செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'Voter Service' என்ற பகுதிக்குச் செல்லவும். அதில் 'Search Your Name in Voter List' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

விவரங்களை உள்ளிடுக: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) அங்கு உள்ளீடு செய்யவும்.

பதிவிறக்கம்: உங்கள் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 'Download' பட்டனை அழுத்தி உங்கள் பூத் ஸ்லிப்பை (Booth Slip) சேமித்துக் கொள்ளலாம்.

வாக்களிக்கச் செல்லும்போது பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை என்றாலும், அது உங்கள் வாக்குச்சாவடி எண் மற்றும் வரிசை எண்ணை எளிதாகக் கண்டறிய உதவும். எனவே, முன்கூட்டியே இதனை எடுத்து வைத்துக்கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும்.

Read Entire Article