TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்

2 weeks ago 3
ARTICLE AD

TN Election 2026 Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை - கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 30ம் தேதி தொடங்க உள்ளது. அதனைதொடர்ந்து, ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம், தகுதியான நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கடைசி வாய்ப்பை வழங்கியது.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுதாக்கலுக்கான அவகாசம் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணபிக்கலாம்.  நேரடியாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தேவையான ஆவணங்களை கொண்டு, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் இன்றுடன் அதாவது மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

2026 தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

இன்று மாலைக்குகள் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, அப்படி தேர்வானவர்களுக்கு என துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அவர்கள் இந்த தேர்தலிலேயே அதாவது வரும் ஏப்ரல் 23ம் தேதியே வாக்களிக்கலாம். மார்ச் 26ம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் தேர்ந்தல் முடிந்த பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு தகுதியான நபர்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள, தேர்தல் ஆணையத்தின் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனர்.

வாக்காளர் அட்டை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

வாக்காளர் சேவை போர்டலில் முன்பதிவு செய்து உங்களது செல்போன் எண்ணிற்கு வரும் ஒடிபி மூலம் உள்நுழையுங்க்ள்

புதிய வாக்காளர் பதிவு என்ற டேபை க்ளிக் செய்து படிவம் 6-ஐ திறக்கவும்

தனிப்பட்ட, முகவரி மற்றும் குடும்ப விவரங்களை நிரப்புங்கள்

தேவையான வயது மற்றும் வசிப்பிடத்திற்கான சான்றுகளை பதிவேற்றம் செய்யுங்கள்

ஒருமுறை முழுமையாக ஆராய்ந்த பிறகு படிவத்தை சமர்ப்பியுங்கள்

இதையடுத்து படிவம் கிடைக்கப் பெற்றது என திரையில் தோன்றும் ஆவணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நேரடியாக விண்ணப்பிக்கும் முறை

வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக செல்பவர்கள்,

படிவம் 6-ஐ பெற்று முழுமையான தனிப்பட்ட மற்றும் வசிப்பிட விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்

வயது மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கான ஆவணங்களின் நகலை இணையுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அலுவலகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பியுங்கள்

எதிர்கால பயன்பாட்டிற்காக அவரிடமிருந்து மனுவை பெற்றதற்கான ஒப்புகை ரசீதை வாங்கிக் கொள்ளுங்கள்

பரிசீலனைக்குப் பிறகு உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை, இறுதியாக வெளியிடப்படும் துணை வாக்காளர் பட்டியலை ஆராந்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

முகவரி சான்றிதழ் - நீர்/மின்சாரம்/keeS இணைப்பு பில் (குறைந்தது 1 வருடம் பழமையானது), ஆதார் அட்டை,  அஞ்சல் அலுவலக தற்போதைய பாஸ்புக்,பாஸ்போர்ட் பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகைப் பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்), பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (சொந்த வீடாக இருந்தால்)

வயது சான்றிதழ் - பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்ட், ஓட்டுநர் உரிமம், கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் (பிறந்த தேதி இருந்தால்),  பாஸ்போர்ட்

சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

ஆன்லைனில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள்  வாக்காளர் சேவை போர்ட்டலில் உள்ள e-EPIC சேவை மூலம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலில் 'e-EPIC பதிவிறக்கம்' பிரிவுக்குள் நுழையவும்

உங்களுக்கான EPIC எண் அல்லது சமர்பித்த படிவத்தின் எண்ணை பூர்த்தி செய்யுங்கள்

OTP அனுப்பு' என்பதை க்ளிக் செய்தால் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் வரும்

பெறப்பட்ட ஒடிபியை குறிபிட்ட இடத்தில் நிரப்பி 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யுங்கள்

இறுதியாக டிஜிட்டல் வாக்காளர் ஐடியைப் பதிவிறக்க 'e-EPIC ஐப் பதிவிறக்கு' என்பதை க்ளிக் செய்யுங்கள்

Read Entire Article