தமிழக இடைக்கால பட்ஜெட்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அரசு 20260 2027ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பான பட்டியலிட்டார்.

8 இலட்சம் கான்கிரீட் வீடுகள்

அந்த வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகளை அமைத்து, குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம். வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை. 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும். மேலும் 29,000 வீடுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றும் வருவதாக கூறினார்.

மேலும் இந்த திட்டம், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், கூடுதலாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அண்மையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், 2001 ஆம் ஆண்டு வரை அரசால் கட்டி முடிக்கப்பட்ட 1,14,488 வீடுகள் 969 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூ. 8,911 கோடி ஒதுக்கீடு - 20,404 கிலோமீட்டர் நீளமுள்ளசாலைகள் மேம்படுத்தல்

மேலும் தமிழ்நாட்டின் குக்கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியினை மேம்படுத்தி. வேளாண்மையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் ஊக்குவித்திட தரமான கிராமச்சாலை அமைக்கும் நோக்கோடு செயல்படுத்தப்பட்டு வரும் 'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு: இதுவரை 8,911 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 20,404 கிலோமீட்டர் நீளமுள்ளசாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-1Iன் கீழ். கிராம ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட இதுவரை 6.000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 82498 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 28,687 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.