<p>தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அது விவாதித்து பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். இந்த முறை ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என்று நம்புகிறேன் என்றும் அப்பாவு கூறினார். </p>