தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

என்ன காரணம்?

தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் ஒப்புதல் தேவை என்பதால், தாமதம் ஆவதாகவும் புதி அரசு அமைந்தபிறகு, தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கின. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8,27,475 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தினசரி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 01:15 வரை தேர்வு 7,545 பள்ளிகளில் நடைபெற்றன.

3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டன. இதற்கான பணிகளில் 4,540 கண்காணிக்கும் படைகள் உருவாக்கப்பட்டு இருந்தன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்

எனினும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தவெக தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாகத் தேர்வாகி உள்ளது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியின் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.