TN 12th Result 2026: 12th ரிசல்ட்.. மே 13 முதல் மதிப்பெண் சான்றிதழ்.. மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் தேதி இதோ!

4 weeks ago 5
ARTICLE AD
<p>12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் தேதியைப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p> <p>கல்லூரி உள்ளிட்ட உயர்நிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.&nbsp;</p> <p><iframe title="🔴 LIVE Tamil Nadu 12th Result 2026 | வெளியாகும் +2 தேர்வு முடிவுகள் அடுத்து என்ன படிக்கலாம்?" src="https://www.youtube.com/embed/f5loXQM603M" width="720" height="405" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>விடைத்தாள் நகல் பெற மே 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 11,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article