TN 10th Result 2026: வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 5 வழிகளில் காணலாம்- எவ்ளோ தேர்ச்சி?

2 weeks ago 3
ARTICLE AD

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 9.30 மணிக்கு வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளை காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற்றன. குறிப்பாக முதல் நாளான மார்ச் 11 அன்று தமிழ் பாடத்துக்கான தேர்வும் 16ஆம் தேதி ஆங்கில பாடத்துக்கான தேர்வும் நடைபெற்றது. மார்ச் 25ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் 30ஆம் தேதி அறிவியல் தேர்வும் நடைபெற்றது. ஏப்ரல் 2ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடந்தது.

இவர்களுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் முழுமையாக நடந்து முடிந்து, மதிப்பெண்கள் கணக்கீடும் முடிந்துள்ளது. மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் நடைமுறையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.

வெளியான தேர்வு முடிவுகள்

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை சரியாக 9.30 மணிக்கு வெளியாகி உள்ளன.

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நாளை (20.05.2026) புதன்கிழமை காலை 09.30 மணியளவில் 2025-2026 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் காணலாம். எப்படி?

குறிப்பாக மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த இணைய முகவரியை க்ளிக் செய்து பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

திரையில் தோன்றும் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் டிஜி லாக்கர் செயலி மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். அதேபோல results.digilocker.gov.in என்ற இணைய முகவரியிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

பள்ளிகளில் நேரடியாகப் பார்க்கலாம்

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் போல பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் முன்பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Whatsapp செயலி வழியாக...

வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi" எனப் பதிவிட்டு பின்னர் (Directorate of Government Examinations) தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.

இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

முன்னதாக மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்வை 7,91,654 மாணவ- மாணவிகள் எழுதி இருந்த நிலையில், மொத்தம் 7,53,694 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதாவது 95.20 சதவீத தேர்ச்சி பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article