TN 10th Result 2026: "இவங்கதான் ரியல் வின்னர்கள்! - 10ம் வகுப்பு தேர்வில் 100% ரிசல்ட் காட்டிய சேலம் சிறைவாசிகள் - முதல் மார்க் எவ்வளவு தெரியுமா?

2 weeks ago 3
ARTICLE AD

சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகள் 41 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில், 41 பேரும் தேர்ச்சி பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆயுள் தண்டனை சிறைவாசி ராஜ்குமார் 324 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கவியரசு 316 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சிவகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் 311 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மாவட்டம் 94.21% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மாவட்டத்தில் உள்ள 518 பள்ளிகளைச் சார்ந்த 20,333 மாணவர்கள், 20,090 மாணவிகள் என மொத்தம் 40,423 பேர் தேர்வெழுதினர். இதில் மாணவர்கள் 18,755, மாணவிகள் 19,326 என மொத்தம் 38,081 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.21 ஆகும். இதில் மாணவர்கள் 92.24 சதவீதம் மற்றும் மாணவிகள் 96.20 சதவீதம் ஆகும். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் சேலம் மாவட்டம் 22வது இடத்தை பிடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 188 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை 296 பள்ளிகளை சேர்ந்த 11,187 மாணவர்கள், 12,328 மாணவிகள் என மொத்தம் 23,515 பேர் நடப்பாண்டு தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 10,086,  மாணவிகள் 11,729 என மொத்தம் 21,815 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: TN 10th Result 2026: தனியார் பள்ளிகளை அலறவிட்ட மகளிர் பள்ளிகள் - ஆண்கள் நிலவரம்? - SSLC ரிசல்ட் விவரங்கள்

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.77 ஆகும். இதில் மாணவர்கள் 90.1% மாணவிகள் 95.1% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அரசு பள்ளிகள் அளவில் தமிழக அளவில் சேலம் மாவட்டம் 20வது இடத்தை பிடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 69 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Read Entire Article