Tiruvannamalai Pournami Girivalam : திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போறீங்களா.. பக்தர்களுக்கு எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன தெற்கு ரயில்வே

1 month ago 4
ARTICLE AD

திருவண்ணாமலையில் கிரிவலம்

திருவண்ணாமலையில் கிரிவலம் என்பது மிகவும் பிரசித்து பெற்றதாகும், அதிலும் பௌர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில் பல லட்சம் பேர் பௌர்ணமி கிரிவலத்திற்கு வருவதால் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளதால் கூடுதல் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. (ரயில் எண் 06130/06129) விழுப்புரம் – திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே முன்பதிவு இல்லாத (Unreserved) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

(ரயில் எண் 06130) விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் 03 மார்ச் 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறு மார்க்கத்தில் (ரயில் எண் 06129) திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் 03 மார்ச் 2026 அன்று மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில்  8 பெட்டிகள் கொண்ட MEMU ரயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த எந்த ரயில் நிலையங்களில் நிற்கும்

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, திருக்கோயிலூர், அதிச்சனூர், ஆண்டம்பள்ளம், தண்டரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Read Entire Article