Tiruppur Power Shutdown : திருப்பூரில் நாளை(15-11-25) மின் தடை! உங்க ஏரியா இருக்கா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

4 weeks ago 3
ARTICLE AD

Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை (15.11.2025) பல்வேறு இடங்களில் உள்ள மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. திருப்பூர் மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட  இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

நாளைய மின் தடை இங்கெல்லாம்?

சந்தைபேட்டை: அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப்
காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி. நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிசன் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, செரங்காடு, டி.ஏ.பி. நகர், என்.பி. நகர், பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலகம் வளாகம், வித்யாலயம், பாரதி நகர், குளத்துபாளையம், செல்வ லட்சுமிநகர், பொது சுத்திகரிப்பு நிலைய பகுதி, கே.கே.ஆர். தோட்டம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

கலெக்டர் அலுவலக துணைமின் நிலையம்: கலெக்டர் அலுவலகம் வளாகம், வித்யாலயம், பாரதி நகர், குளத்துபாளையம், செல்வ லட்சுமிநகர், பொது சுத்திகரிப்பு நிலைய பகுதி, கே.கே.ஆர். தோட்டம், வீரபாண்டி

முன்னெச்சரிக்கை:

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article