திருப்பதி லட்டு கலப்பட வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு நான்கு பேரை கைது செய்துள்ளது. ஏஆர் டைரி, வைஷ்ணவி டைரி மற்றும் போலே பாபா டைரி ஆகியவற்றிலிருந்து திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.