Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!

5 days ago 3
ARTICLE AD

திருநெல்வேலியில் பிரபல அல்வா கடை பெயரில் போலி அல்வா விற்பனை செய்யப்பட்டதாக 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் டால்டா ஊற்றி செய்யப்பட்ட 1000 கிலோ அல்வா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊரும் விதவிதமான உணவுப் பொருட்களை பிரத்யேகமாக கொண்டிருக்கிறது. அதனை சிறப்பிக்கும் வண்ணம் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி என்றால் நம் நினைவுக்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான். அப்படி இருக்குபோது அதே பெயரில் போலி கடைகள், போலி லேபிளுடன் கூடிய அல்வா ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் வெளியூர் மக்கள் தான் இருட்டுக்கடை அல்வாவை நாள்தோறும் அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள். மாலை 5 மணிக்கு தான் கடை திறக்கும் என்பதால் ரயில், பேருந்தை பிடிக்க செல்லும் பலராலும் சில நேரங்களில் வாங்க முடியாமல் செல்கிறது. அதேசமயம் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் திருநெல்வேலி அல்வா என்ற பெயரில் பிரபல கடைகளான இருட்டுக்கடை, சாந்தி சுவீட்ஸ் பெயரில் அல்வா விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கும் சாந்தி சுவீட்ஸ் பெயரில் நெல்லையில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. சாந்தி பெயருக்கு முன்னால் ஏதேனும் ஒரு வார்த்தை சிறிதாக சேர்த்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் ஒரிஜினல் கடை எது என தெரியாமல் வெளியூர் மக்கள் ஏமாற்றமடைகிறார். இதனால் ஒரிஜினல் கடைகளுக்கும் தேவையில்லாத அவப்பெயர் உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்படியான நிலையில் திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமையில் நெல்லை டவுண் மற்றும் ஜங்ஷன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் பல கடைகளில் நெய் அல்வா என்ற பெயரில் லேபிள் ஒட்டப்பட்ட அல்வாவானது டால்டா மற்றும் கடலை எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இப்படி செய்து நெய் அல்வா என்ற பெயரில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த வகையில் விதிகளை மீறியதாக 6 கடைகள் சீல் வைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோயில் அருகே செயல்படும் 4 கடைகள், நெல்லை சந்திப்பு பகுதியில் 2 கடைகள் மீது நடவடிக்கை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் சுமார் ஒரு டன் அதாவது 1000 கிலோ அல்வா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லேபிள்கள் மட்டுமே 25 கிலோ வரை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை போலி அல்வா தயாரிப்பாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையட்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read Entire Article