சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே லயன் சபாரி உள்ள நிலையில் புலிகள் சபாரி கொண்டுவரப்பட உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park (AAZP) )

சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக, வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். வார நாட்களில் 2500 முதல் 3000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பத்தாயிரம் பார்வையாளர்கள் வரை வந்து செல்கின்றனர்.

பலவகை விலங்குகள் ( vandalur zoo animals )

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

லயன்ஸ் சபாரி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சிங்கங்களை அதன் அருகே சென்று கண்டு ரசிக்கும் லயன்ஸ் சபாரி பயன்பாட்டில் உள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் பாதுகாக்கப்பட்ட வாகனங்களில் லயன்ஸ் சபாரி இருப்பிடத்திற்கு சென்று , சுதந்திரமாக உலா வரும் சிங்கத்தை பார்த்து ரசிப்பதை குழந்தைகள் மற்றும் பார்வையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதேபோன்று இங்கு பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வசதி உடன் மான் சபாரி பகுதிக்கும் அழைத்துச் செல்கின்றனர்.‌ மான் மற்றும் சிங்கம் சஃபாரி பொதுமக்கள மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

காட்டு மாடு மற்றும் புலி சபாரி

காட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தில் வண்டலூர் பூங்கா சிறந்து விளங்கி வருகிறது. மேலும் புலிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகமாக உள்ளன. தற்பொழுது 27 காட்டு மாடுகள், 9 வெள்ளைப் புள்ளிகள், 11 வங்கப் புலிகள் உள்ளன. தொடர்ந்து புலிகள் மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காட்டு மாடு மற்றும் புலிகள் ஆகியவற்றை வைத்து சபாரி தொடங்க பூங்கா நிர்வாகம் திட்டம் திட்டி உள்ளது.

தற்பொழுது மான் சபாரி இருக்கும் இடத்தில் இரண்டாக பிரித்து ஒரு பகுதியில் காட்டு மாடு அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட லயன் சபாரி இரண்டாகப் பிரித்து அங்கு டைகர் சபாரி அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு திட்டம் தொடர்பான அறிக்கை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய ஆணையம் அனுமதி கிடைத்துடன் தொடங்கும் எனக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வனத்தில் இருக்கும் அனுபவம் !

இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், பாதுகாக்கப்பட்ட வாகனங்களில் செல்லும் பார்வையாளர்கள் முதலில் மான் மற்றும் காட்டு மாடுகளை பார்ப்பார்கள். இதனைத் தொடர்ந்து சிங்கம் மற்றும் புலி ஆகியவற்றையும் அதே வாகனத்தில் பார்த்துவிட்டு பாதுகாப்பாக திரும்பும் வகையில் அமையும் எனக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புலிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.