Thrombectomy Device: இந்தியாவில் முதல் முறை.. பக்கவாத சிகிச்சைக்கான சாதனம்.. திரும்பிப் பார்க்க வைத்த ஒரகடம்

6 months ago 6
ARTICLE AD

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில், சிப்காட் நிறுவனம் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என தனி தொழில் பூங்காவை அமைத்துள்ளது. இந்த தொழில் பூங்காவில், தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மருத்துவ சாதன பூங்கா - Medical Devices Park

முதல் கட்டமாக 150 ஏக்கரில் மருத்துவ சாதன பூங்கா அமைக்கும் பணி முடிந்துள்ளது. இதுவரை 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில் அங்கு இருக்கும் நிறுவனங்கள், அறுவை சிகிச்சை எந்திரங்கள், எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகள், மூட்டு மாற்று சிகிச்சை கருவிகள், வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ உதறி பாகங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தயாரிக்கப்படும் உபகரணங்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த பூங்காவில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளை பரிசோதிக்கவும், பாதுகாப்பாக வைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியா மோட்டார் வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பில், சென்னை தலைநகரமாக விளங்கி வருகிறது. விரைவில் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பிலும் சென்னை முக்கிய மையமாக மாற்ற இந்த பூங்கா மிகப்பெரிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை மாற்றப்போகும் தயாரிப்பு

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் மருத்துவ சாதனப் பூங்காவில், S3V வாஸ்குலர் நிறுவனம், இந்தியாவின் முதல் உள்நாட்டு பக்கவாத சிகிச்சைக்கான சாதனத்தை, ஓரகடத்தில் உள்ள மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உற்பத்தி செய்யவுள்ளது.

இந்தியாவின் தொழில் நுட்ப மேம்பாட்டு வாரியம் (Technology Development Board - TDB), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து S3V வாஸ்குலர் நிறுவனத்திற்கு நிதி வழங்குகிறது. இதன் மூலம் "கடுமையான இஸ்கிமிக் பக்கவாத சிகிச்சைக்கான மெக்கானிக்கல், த்ரோம்பெக்டோமி கிட் ஒருங்கிணைந்த உற்பத்தி" என்ற திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியுள்ளது. உள்நாட்டு கண்டுபிடிப்புகள் மூலம் பக்கவாத சிகிச்சையை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்ட இந்த முன்னோடி முயற்சிக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் உதவிகளை வழங்கி வருகிறது.

நோயாளிகளுக்கு தீர்வு ..!

பெரிய இரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் கடுமையான இஸ்கிமிக் பக்கவாதத்தால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் தலையீடான மேம்பட்ட மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி கிட்களை உருவாக்கி உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான த்ரோம்போலிசிஸுடன் ஒப்பிடுகையில், த்ரோம்பெக்டோமி குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்ட விளைவுகளை வழங்குகிறது.

நீண்ட கால பக்கவாதம் மற்றும் ஊனத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. இதனால் "பக்கவாதம் மற்றும் மீட்சி" இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை உருவாக்குகிறது. மைக்ரோகதீட்டர்கள், ஆஸ்பிரேஷன் கதீட்டர்கள், கைட்வயர்கள் மற்றும் ஸ்டென்ட் ரெட்ட்ரீவர் அமைப்புகள் உள்ளிட்ட நியூரோ-இன்டர்வென்ஷன் சாதனங்களின் முழு தொகுப்பையும் உள்நாட்டிலேயே வடிவமைத்து, உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் எஸ்3வி வாஸ்குலர் டெக்னாலஜிஸ் ஆக உள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக

இந்தியாவில் முதல் முறைS3V வாஸ்குலர் நிறுவனம், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் பக்கவாத சிகிச்சை சாதனத்தை (மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி கிட் - Mechanical Thrombectomy Kit) உற்பத்தி செய்யவுள்ளது. இந்த சாதனம், மூளையில் ஏற்படும் இரத்தக் கட்டிகளை அகற்றி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

குவியும் வேலை வாய்ப்புகள்

இதன் மூலம் தமிழகம் மருத்துவ சாதன தயாரிப்பில் மிக முக்கிய இடத்தை பெற உள்ளது. அதேபோன்று உற்பத்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சார்பை நோக்கி இந்தியா

இந்த திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதால், தற்சார்பு பொருளாதாரத் பெருமளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பயனை அளிக்கும் எனவும் பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த கருவியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் உருவாக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article