தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளருமான மோகன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.