Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!

3 days ago 2
ARTICLE AD

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனது முடிவை ஏற்கனவே முதலமைச்சர் விஜயிடம் தெரிவித்து விட்டேன் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதி

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சாத்தியப்படாது என சொல்லப்பட்ட கூட்டணி ஆட்சி கைகூடியுள்ளது அரசியல் களத்தில் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த தேர்தல் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் ஆணைய விதிகளின்படி அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு அதிமுக 4 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளாதால் நவம்பர் மாதத்திற்குள் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது.

இதில் வெற்றி பெற்று தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் திருச்சி கிழக்கில் தவெக வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன், லால்குடியில் போட்டியிட்டு தோற்ற கு.ப.கிருஷ்ணன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

திருச்சி கிழக்கு போட்டியா? - திருமா விளக்கம்

இந்த நிலையில் விசிக தொண்டர்களிடையே பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், “நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட என்னால் அமைச்சரவையில் சேர முடியும். தவெக தரப்பில் இருந்தும் அப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. விசிகவின் முன்னணி நிர்வாகிகளும் அதனை வலியுறுத்தினார்கள். நல்ல பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் நான் அதனையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்க முடியும். ஒப்புக்கொண்டிருக்க முடியும். தொடக்கத்தில் நான் கட்சியே அமைச்சரவையில் இடம்பெறாது என முடிவெடுத்தோம். பிறகு ஒருவேளை இடம்பெறும் சூழல் வந்தால் நான் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பதை உறுதியாக சொன்னேன்.

இதையும் படிங்க: தவெக தியாகம் செய்யலையா? .. திமுக என்ன பண்ணுச்சு தெரியுமா?.. ஆ.ராசாவை சாடிய நாஞ்சில் சம்பத்!

இப்போதும் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியா என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் 100 சதவிகிதம் சொல்கிறேன். எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். அதற்கான வாய்ப்பு இல்லை. இதனை நான் ஏற்கனவே முதலமைச்சர் விஜயிடத்திடல் தெளிவாக சொல்லிவிட்டேன். இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு உடன்பாடு இல்லை. அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. விசிக நிர்வாகிகள் என்னிடம் பேசியது உண்மை தான். விஜயிடம் ஆலோசனை செய்தது உண்மை தான். ஆனால் என் மனம் ஏற்கவில்லை. யாரும் என் எண்ணத்தை மாற்றி விட முடியாது” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article