Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!

4 weeks ago 6
ARTICLE AD

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக தலைமை இல்லாமல் புதிய ஆட்சி அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் புதிய கட்சி தலைமையிலான ஆட்சி அமைகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி முதன்முறையாக தமிழ்நாட்டில் அமைகிறது.

விசிக பிடியில் தவெக:

விஜய் தலைமையிலான ஆட்சியை அமைக்க தவெக-விற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர். இன்னும் 2 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவிற்காக தமிழக வெற்றிக் கழகம் காத்திருக்கிறது.

விசிக ஆதரவு அளிப்பது ஏறத்தாழ உறுதியான நிலையில், விசிக-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தவெக கட்சி காத்துள்ளது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற பதிவை வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், விசிக அமைச்சரவையில் இடம் கேட்பதை உணர முடிகிறது. திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியை விசிக நிபந்தனையாக விதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியை கண்டிப்பாக ராஜினாமா செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் திருச்சி கிழக்கு தொகுதியையே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி கிழக்கில் போட்டியிடும் திருமா:

அவ்வாறு விஜய் ராஜினாமா திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தால் அந்த தொகுதியில் திருமாவளவன் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. அவ்வாறு களமிறங்கி அவர் சட்டசபையில் விசிக எண்ணிக்கையை 3-ஆக உயர்த்துவதுடன் துணை முதலமைச்சர் பதவியையும் தக்கவைப்பார் என்று கருதப்படுகிறது.

ஆனால், தற்போது வரை விடுதலைச் சிறுத்தைகள் தங்களது முடிவை அறிவிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர். திருமாவளவன் தனது கட்சியினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் சூழலில், அவரது முடிவிற்காக மொத்த தமிழ்நாடும் காத்துள்ளது.

தவிக்கும் தவெக:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக-வை நாடுவதே தவெக-விற்கு சிறந்த தீர்வாகும்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் முதலில் வெளியான நிலையில், தாங்கள் எப்போதும் திமுக-வுடனே ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அவர் அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்றால் தற்போது வகிக்கும் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Government Formation LIVE: தமிழகத்தில் புதிய சகாப்தம்: நாளை முதல்வராக பதவியேற்கிறார் 'தளபதி' விஜய்!

Read Entire Article