வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மோகன், மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் ஏற்படுத்தும் தருணமாக அமையும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் பல நாள் காத்திருப்புக்கு பின்னர் 'தி கோட்' படத்தின் டிரைலர் வெளியாகி மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்து மில்லியன் கணக்கான வியூஸ்களை சில மணிநேரங்களிலேயே பெற்று சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக விஜயின் டி ஏஜிங் காட்சிகள் இடம்பெற்று இருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

'தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என தகவல்கள் வெளியான நிலையில் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்தது. அந்த வகையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'விசில் போடு' பாடலை தொடர்ந்து சின்ன சின்ன கண்கள் மற்றும் ஸ்பார்க் பாடல்கள் வெளியாகின. வழக்கமாக விஜய் பட பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்துக்கு சற்று குறைவாகவே காணப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் ஆனால் இந்த முறை அது ஏனோ மிஸ்ஸிங்.

மச்சி கெடா மஞ்ச சட்ட
மம்டி வரான் பள்ளம் வெட்ட
மட்ட மட்ட ராஜ மட்ட
எங்க வந்து யாரு கிட்ட

A Ilayathalapathy Blast 💥 Wait for Aatanayagan’s dance. @actorvijay @vp_offl @thisisysr @Ags_production @archanakalpathi @Jagadishbliss pic.twitter.com/uJ45oKfCYS

— Vivek (@Lyricist_Vivek) August 30, 2024

இந்நிலையில் 'தி கோட்' படத்தின் நான்காவது பாடல் ஆகஸ்ட் 31ம் தேதியான நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பாடல் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நான்காவது பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடலின் முதல் நான்கு வரிகளை அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"மச்சி கெடா மஞ்ச சட்ட
மம்டி வரான் பள்ளம் வெட்ட
மட்ட மட்ட ராஜ மட்ட
எங்க வந்து யாரு கிட்ட

இளைய தளபதியின் பிளாஸ்ட்... ஆட்டநாயகன் டான்ஸ் காண காத்திருங்கள்... என பதிவிட்டுள்ளார்.