நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் விக்ரம் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் ஷூட்டிங்கானது கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Producer @Dhananjayang confirmed in a recent interview that, StudioGreen locked #ChiyaanVikram's #Thangalaan as AUG 15th release 🔐🔥
- Full copy is ready & censor to happen on July✅
- Release date Announcement expected soon⌛ pic.twitter.com/q9Gl0h95xp

— AmuthaBharathi (@CinemaWithAB) June 29, 2024

இந்த படத்தில் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் விக்ரம் பார்க்கவே வித்தியாசமாக காணப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி படம் ரிலீசாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மாதங்கள் சென்றதே தவிர தங்கலான் படம் ரிலீசாவதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகர் விக்ரம் பிறந்தநாளன்று விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் புதிய வீடியோ வெளியிடப்பட்டது. இப்படியாக ரிலீஸ் தேதியை அறிவிக்காவிட்டாலும் அவ்வப்போது படக்குழு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன், தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என நேர்காணல் ஒன்றில் உறுதி செய்துள்ளார். ஜூலையில் படத்தின் இறுதி காப்பி மற்றும் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி படக்குழுவால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.