Thangalaan: தங்கலானே..! 5 மணிக்கு வருது தங்கலான் படத்தின் அடுத்த பாடல் - ரெடியா இருங்க!

1 year ago 7
ARTICLE AD

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறுவது போல இந்த கதைக்களம் உருவாகியுள்ளது.

5 மணிக்கு தங்கலான் அப்டேட்:

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் மினுக்கி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இன்று தங்கலான் படத்தின் இரண்டாம் பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தங்கலானே என்று தொடங்கும் இந்த பாடலின் ப்ரமோ சற்று முன் வெளியாகியது.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், அர்ஜூனன் அன்புதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆங்கிலேய அதிகாரியாக டேனியல் கால்டகிரோன நடித்துள்ளார்.

#Thangalaan - Next Single War Song releasing Today at 5PM..,💥 promo..👌 A Gvprakash Musical..⭐pic.twitter.com/xS5g1777pe
— Laxmi Kanth (@iammoviebuff007) August 2, 2024

ட்ரெயிலருக்கு அமோக வரவேற்பு:

தங்கச்சுரங்கத்தை பின்னணியாக கொண்ட இந்த தங்கலான் படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 3 வாரத்திற்கு முன்பு வெளியான இந்த படத்தின் ட்ரெயிலர் ஆங்கிலேயர்களின் தங்க தேவைக்காக தங்கம் தேடும் பழங்குடியின மக்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை படமாக எடுத்துள்ளனர். இதில் மாளவிகா மோகனன் ஆரத்தி என்ற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலரில் விக்ரம் உள்பட அனைவரின் நடிப்பும் மிரட்டலாக இருந்தது. இதற்கு ரசிகர்கள் ஏற்கனவே பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

கடந்த 2 வாரத்திற்கு முனு்பு வெளியான மினுக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் தங்கலான் பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.கிஷோர் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா எடிட் செய்துள்ளார். தங்கலான் படம் சுதந்திர தின விருந்தாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம் நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வந்தது. இதையடுத்து, விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியாக இருக்கிறது. தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரம் வீரதீர சூரன் என்ற படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

Read Entire Article