Thangalaan First Single: இன்னும் கொஞ்ச நாள்தான்... தங்கலான் பட அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் குமார்!

1 year ago 6
ARTICLE AD

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கோலிவுட் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் படங்களில் ஒன்று. விக்ரம், பார்வதி திருவோத்து, மாலவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்டமாக சென்னை, பின் ஆந்திராவில் கடப்பா, ஒகெனக்கல் , மாலத்தீவுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்கள் அங்கிருந்த பழங்குடிகள் மீது நடத்திய வன்முறைகளும் அவர்களை எதிர்த்து போராடிய பழங்கி சமூதாயத்தின் கதையை படமாக்கியுள்ளார் பா. ரஞ்சித். கடந்த 2023ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடந்தது

ரிலீஸ் தேதியில் தாமதம்

தங்கலான் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. பின் ஏப்ரல் மாதம், பின் தேர்தல் முடிவடைந்த பின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவிதமான தகவல்களும் படக்குழு சார்பாக வெளியாகவில்லை. படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்சயன் தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்திருந்தார்.

"ஒரு படத்துக்காக பல நூறு கோடிகளை செலவிடுகிறார் தயாரிப்பாளர். பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக படத்தை வெளியிட்டு ரிஸ்க் எடுக்க முடியாது. சரியான தேதி மற்றும் பிற பொருளாதார சூழல்களைப் பொறுத்துதான் ஒரு படத்தை வெளியிட முடியும். அதனால் அதிகாரப்பூர்வமாக படத்தின் அப்டேட் வரும்வரை காத்திருந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்று தனஞ்சயன் தெரிவித்திருந்தார்.

அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

#LuckyBhaskar and #thangalaan first singles completed and handed over to the producers …. Both singles soon 🔥 … c u all soon . 🫡
— G.V.Prakash Kumar (@gvprakash) June 11, 2024

தங்கலான் படத்தில் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். தனது எக்ஸ் தளத்தில் தங்கலான் படத்தின் ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டதாகவும், விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Read Entire Article