Thalapathy Vijay: விஜயை தப்பா கணக்கு போடுறீங்க.. எதிர்ப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ஷெல்வி!

1 month ago 6
ARTICLE AD

விஜயை ஆதரிப்பவர்கள் எல்லாரும் நன்றாக படித்தவர்கள் என பிரபல ஜோதிடர் ஷெல்வி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேசமயம் விஜயின் அரசியல் வருகையின்பின் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டது, நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக சங்கீதா மனுவில் குறிப்பிட்டது என ஏகப்பட்ட சம்பவங்கள் விஜய்க்கு எதிராக அமைந்தது.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோதிடர் ஷெல்வி, “விஜயைப் பார்த்து எல்லாக் கட்சிக்காரங்களும் பயப்படுறாங்க. விஜய் ராசிக்கு நீட்சபங்க ராஜயோகம் நடக்கிறது. அப்படியானால் ஒரு பெண்ணால் பிரச்னை வரும் என இருக்கிறது. அப்படியாக மனைவி சங்கீதா விவகாரம் வந்தது. அது வேலைக்காகாது என சொன்னேன். அப்படியாகவே நடந்தது. 8 வருடம் விவாகரத்து வழக்கு நடந்து மீண்டும் இணைந்த தம்பதிகளும் இருக்கிறார்கள். திருமணமான முதல் நாளே விவாகரத்து கேட்பவர்களும் இருக்கிறார்கள். விஜய், சங்கீதாவும் ஏன் திரும்ப சேர மாட்டார்கள் என உள்ளதா?.. குடும்பத்தை விஜய் பார்க்க மாட்டேங்கிறார் என யாரும் பார்த்தார்களா?.. மற்றவர்கள் குடும்பத்தைப் பற்றி பேச உரிமை கிடையாது.

விஜயை குறை சொல்பவர்கள் எல்லாரும் சந்தோசமாக இருக்குறீங்களா?.. விஜயை ஆதரிப்பவர்கள் எல்லாரும் நன்றாக படித்தவர்கள்.

வெளிநாட்டில் இருந்து வாக்கு செலுத்த லட்சக்கணக்கில் பணம் செலுத்த வருகை தருகிறார்கள். நீட்சபங்க ராஜயோகம் சிலருக்கு 21 வயதில் தொடங்கும். சிலருக்கு 36,52 வயதில் இருக்கும். எப்போது தொடங்கினாலும் அந்த ராசிக்காரர் உச்சத்தில் இருப்பார்கள். மே 4ம் தேதி எதிர்பார்க்காத முடிவு வரும். 2025 புரட்டாசி மாதம் இருந்து அவர் ஆட்டம் ஆரம்பிக்கும் என சொன்னேன். நிறைய பேரு காணாம போய்ட்டாங்க. விஜயை குறைத்து மதிப்பிடக்கூடாது. அனைத்து கருத்து கணிப்புகளும் தவறாகும்.

நீட்சபங்க ராஜயோகம் இருப்பவர்களின் செயல்பாட்டை கணிக்கவே முடியாது. விஜய்க்கு நகரத்தில் மட்டுமே ஓட்டு இருக்கிறது. கிராமத்தில் இல்லை என சொல்கிறார்கள். ஆனால் நகரத்தில் இருப்பவர்கள் எல்லாம் கிராமத்தில் இருந்து பணிக்காக வந்தவர்கள் தான். இது பெரிய தாக்கம் ஏற்படுத்தும். ஜோதிடப்படி இது அரசியலில் குழப்பமான காலக்கட்டமாகும். எம்ஜிஆர் காலத்தில் அவர் அதிமுக ஆரம்பித்தபோது அவருக்கு ஓட்டுப்போட வேண்டும் என குடும்பத்தில் பெண்கள் முடிவு செய்தார்கள்.

அது சிவாஜி கணேசனுக்கு நடக்கவில்லை. கார்த்திக் வரை அதுதான் நிலைமையாக இருந்தது. ஜெயலலிதாவை முதலில் சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால் ஆளுமையை நிரூபித்தார். விஜய் அந்த பாதையில் வருகிறார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஏன் என தெரியவில்லை. விஜய் 60 வருட அரசியலை மாற்றியுள்ளார்” என ஷெல்வி தாமோதரன் கூறியுள்ளார்.

Read Entire Article