Thalapathy 69 : ரசிகர்களுக்கு ஏமாற்றம்...தளபதி 69 படத்தில் இருந்து விலகிய ஷிவராஜ்குமார்..என்ன காரணம்?

1 year ago 7
ARTICLE AD
<h2>தளபதி 69</h2> <p>விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே , பிரியாமணி , கெளதம் மேனன் , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் . அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கே.வி.என் ப்ரோடக்&zwnj;ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்கள் முன்பு தகவல் வெளியானது. இதனை நடிகர் ஷிவராஜ்குமாரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே நெல்சன் இயக்கிய ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஷிவராஜ் குமார் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தளபதி 69 படத்தில் அவர் நடிக்க இருக்கும் தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.</p> <p>இப்படியான நிலையில் தளபதி 69 படத்தில் இருந்து ஷிவராஜ்குமார் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்கள் முன்பு எச்.வினோத் தன்னை சந்திக்க வந்து <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> படத்தில் நீங்கள் நடிக்க முடியாது. ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் உங்களுக்கு என் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுப்பேன் என எச் வினோத் தன்னிடம் தெரிவித்ததாக ஷிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். தன்னை படத்தில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும் இது தன்னை தனிப்பட்ட விதத்தில் பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்</p>
Read Entire Article