<p>தென்காசி மாவட்டம் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>
<p>தென்காசி மாவட்டத்தில் உள்ள இடைகால் அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடனே அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். </p>