Tata Sierra Mileage: டாடா சியாரா கார் மாடலின் தொடக்க விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

என்ட்ரி கொடுத்த டாடா சியாரா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டித்தன்மை மிக்க காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், டாடா நிறுவனத்தின் சியாரா கார் மாடல் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மூலமும், நவீன காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு மொழியாலும் புதிய எஸ்யுவி ஆனது தனித்துவமானதாக காட்சியளிக்கிறது. அதேநேரம், வாடிக்கையாளர்களின் பிரதான எதிர்பார்ப்புகளான மைலேஜ் மற்றும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான விலை தொடர்பான கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

டாடா சியாரா இன்ஜின் ஆப்ஷன்:

டாடா சியாராவில் இரண்டு பெட்ரோல் மற்று ஒரு டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் DCA ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது - இது பிரதான போட்டியாளர்களான க்ரேட்டா மற்றும் செல்டோஸின் 115 குதிரை திறனை காட்டிலும் 106 குதிரை திறன்களையே (hp) உற்பத்தி செய்கிறது. அதேநேரம், இழுவை திறனில் போட்டியாளர்களை (144Nm) காட்டிலும் அதிகமாக சியாரா 145Nm இழுவை திறனை உற்பத்தி செய்கிறது

டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது - 160hp மற்றும் 255Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் க்ரேட்டா என் லைன், கியா செல்டோஸ் 1.5 டர்போ பெட்ரோல், ஃபோக்ஸ்வாகன் டைகன் ஜிடி மற்றும் ஸ்கோடா குஷக் 1.5 டர்போ பெட்ரோல் உடன் போட்டியிடுகிறது.

டர்போ டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது - 118hp மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

டாடா சியாரா - மைலேஜ் எதிர்பார்ப்புகள்

ARAI எனப்படும் இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் சார்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி,

1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது லிட்டருக்கு 15 முதல் 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம்

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது லிட்டருக்கு 14 முதல் 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம்

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது லிட்டருக்கு 18 முதல் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம்

கடந்த 1995ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த பழைய சியாரா கார் மாடலின் டீசல் வேரியண்டானது லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கியதாக கூறப்படுகிறது.

டாடா சியாரா - போட்டியாளர்களின் விலை

மொத்தம் 7 வேரியண்ட்களின் விற்பனை செய்யப்படும் டாடா சியாரா கார் மாடலின் தொடக்க விலையானது ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களுக்கான விலை விவரம் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சியாராவின் போட்டியாளர்களாக கருதப்படும் ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி விக்டோரிஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி க்ராண்ட் விட்டாரா, எம்ஜி ஏர்க்ராஸ் மற்றும் ஸ்கோடா குஷக் ஆகியவற்றின் தொடக்க விலை (எக்ஸ்-ஷோரூம்) நிலவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹுண்டாய் க்ரேட்டா - ரூ.10.72 லட்சம்

கியா செல்டோஸ் - ரூ.10.79 லட்சம்

ஹோண்டா எலிவேட் - ரூ.10.99 லட்சம்

மாருதி விக்டோரிஸ் - ரூ.10.50 லட்சம்

டொயோட்டா ஹைரைடர் - ரூ.10.95 லட்சம்

மாருதி க்ராண்ட் விட்டாரா - ரூ.10.76 லட்சம்

சிட்ரோயன் ஏர்க்ராஸ் - ரூ.8.29 லட்சம்

ஸ்கோடா குஷக் - ரூ.10.61 லட்சம்