Tata Punch: ரூ.85 ஆயிரம் தள்ளுபடி.. Punch காரை 6 லட்சத்துக்கும் குறைவாக தரும் டாடா - எப்போது வரை?

4 months ago 4
ARTICLE AD

இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள கார்களில் டாடா தவிர்க்க முடியாத நிறுவனம் ஆகும். தரம், பாதுகாப்பு அம்சம் என்று டாடா காரில் இருக்கும் பல்வேறு சிறப்பம்சங்களுக்காகவே டாடாவின் விற்பனை முன்னணியில் உள்ளது.

பஞ்ச்க்கு தள்ளுபடி தந்த கார்:

டாடா-வின் விற்பனையில் தற்போது முன்னணியில் இருப்பது பஞ்ச்  ஆகும். டாடா பஞ்ச் காரின் விற்பனை சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், டாடா பஞ்ச் காருக்கு டாடா தள்ளுபடி அறிவித்துள்ளது. அதாவது, டாடா பஞ்ச் பெட்ரோல் காருக்கு ரூபாய் 65 ஆயிரமும், டாடா பஞ்ச் சிஎன்ஜி காருக்கு ரூபாய் 85 ஆயிரமும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு கம்மியா?

பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்களின் முதன்மை தேர்வாக டாடா பஞ்ச் உள்ளது. பஞ்ச் காரில் மட்டும் 31 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 6 லட்சத்து 19 ஆயிரம் ஆகும். 5 இருக்கைகள் இந்த காரில் உள்ளது. இதனால், 5 பேர் உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு இந்த கார் ஏற்றது ஆகும்.

இந்த காரின் தொடக்க விலை 6.19 லட்சம் எனும் நிலையில், 65 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்பதால் இந்த காரின் விலை 6 லட்சத்திற்கும் குறைவாகவே வரும். அதாவது, 5.54 லட்சம் மட்டுமே இந்த காரின் விற்பனை விலை வரும். இந்த சலுகை இந்த ஆகஸ்ட் மாதம் மட்டுமே ஆகும்.

5 ஸ்டார் பாதுகாப்பு:

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு பாதுகாப்பு தரத்தில் 5 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார் எந்தளவு பாதுகாப்பானது என்பதை நமக்கு உணர்த்தும். இரட்டை ஏர்பேக் காரில் உள்ளது. எஸ்யூவி டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் தொழில்நுட்ப வசதி இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

ப்யூர், ப்யூர் ஓ, அட்வென்சர், அட்வென்சர் ப்ளஸ், அட்வென்சர் சன்ரூஃப், அட்வென்சர் ப்ளஸ் சன்ரூஃப், அக்கம்பளிஷ்ட் ப்ளஸ், அக்கம்ப்ளிஷ்ட் ப்ளஸ் சன்ரூஃப் என பல வேரிய்ண்ட்கள் உள்ளது. 6 லட்சத்தில் இருந்து ரூபாய் 10 லட்சம் வரை இந்த கார் பல வேரியண்ட்களில் உள்ளது.

சிஎன்ஜி காருக்கும் சலுகை:

சிஎன்ஜி பஞ்ச் ரூபாய் 7 லட்சத்து 29 ஆயிரத்து 990 ஆகும்.  சிஎன்ஜியில் அட்வென்சர் சிஎன்ஜி, அட்வென்சர் ப்ளஸ் சிஎன்ஜி, அட்வென்சர் சன்ரூஃப் சிஎன்ஜி, அட்வென்சர் ப்ளஸ் சன்ரூஃப் சிஎன்ஜி ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் உள்ளது. சிஎன்ஜி பஞ்ச் காருக்கு ரூபாய் 85 ஆயிரம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், அந்த கார் 6.44 லட்சம் ரூபாய்க்கு  விற்கப்படுகிறது.

டாடா பஞ்ச் கார் பெட்ரோல், சிஎன்ஜி மட்டுமின்றி மின்சார காராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாடா பஞ்ச் மின்சார காரின் விற்பனையும் இந்தியாவில் படுஜோராக நடந்து வருகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.99 லட்சம் ஆகும். விரைவில் மின்சார கார்களுக்கும் தள்ளுபடியை டாடா தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article