Tata Offers: 3 லட்சம் வரை ஆஃபர்! பட்ஜெட் கார் முதல் சொகுசு கார் வரை கோடைத் தள்ளுபடி - டாடா அறிவிப்பு

4 weeks ago 6
ARTICLE AD

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று டாடா. டாடா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், மே மாத தள்ளுபடியை டாடா நிறுவனம் அளித்துள்ளது.

டாடா நிறுவனம் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடியை அளித்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

1. Curvv EV (MY2025)

டாடாவின் மிகவும் புகழ்பெற்ற மின்சார கார்களில் ஒன்று Curvv EV. இந்த காருக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Curvv EV காருக்கு ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 18.05 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 23.54 லட்சம் ஆகும். 585 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் Curvv EV காருக்கு 3 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதால் இதன் தொடக்க விலை ரூபாய் 15 லட்சம் ஆகும்.

2. Tata Curvv:

டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் இந்த Tata Curvv. இந்த காருக்கு மே மாத ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 50 ஆயிரம் இந்த மாத தள்ளுபடியாக அளித்துள்ளனர். 42 வேரியண்ட் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.56 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.71 லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் ஓடும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

3. Harrier & Safari:

டாடா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இரு கார்கள் Harrier & Safari. இந்த கார்களுக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 25 ஆயிரமும் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 35 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். Harrier காரின் தொடக்க விலை ரூபாய் 16.05 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 32.73 லட்சம் ஆகும்.

Safari காரின் தொடக்க விலை ரூபாய் 16.54 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 33.42 லட்சம் ஆகும். இந்த கார் பெட்ரோல், டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. இதில் மொத்தம் 61 வேரியண்ட் உள்ளது.

4.Altroz:

டாடா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Altroz. பட்ஜெட் விலைக் காரான Altroz காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும் அளிக்கப்படுகிறது. இதன் மொத்த தள்ளுபடி ரூபாய் 30 ஆயிரமும் அளிக்கப்படுகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.56 லட்சமும், இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 13.27 லட்சம் ஆகும். பட்ஜெட் விலை காரான இந்த கார் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் வேரியண்டில் ஓடுகிறது. இந்த காரில் 22 வேரியண்ட் உள்ளது.

5. Tiago & Tigor:

டாடாவின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Tiago மற்றும்  Tigor. இந்த இரண்டு கார்களும் டாடாவின் பட்ஜெட் விலை கார்கள் ஆகும். இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அளிக்கப்பட்டு மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

Tiago காரின் தொடக்க விலை ரூபா் 5.52 லட்சமும் டாப் வேரியண்ட் ரூபாய் 9.45 லட்சமும் ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. Tigor காரின் தொடக்க விலை ரூபாய் 6.69 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.55 லட்சம் ஆகும்.

6. Tata Nexon:

டாடாவின் பட்ஜெட் கார்களில் ஒன்று Tata Nexon ஆகும். இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 10 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 25 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.81 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 17.69 லட்சம் ஆகும்.

Tiago EV காருக்கு டீலர் தள்ளுபடியும், Nexon EV காருக்கு குறிப்பிட்ட தள்ளுபடிகளும், Harrier மின்சார காருக்கு லாயல்டி தள்ளுபடியும் அளிக்கின்றனர்.

Read Entire Article