Tata Altroz Rival: டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கை வாங்க முடியலையா? டோண்ட் வரி - அதா இருக்கே 5 மாடல்கள்

2 weeks ago 3
ARTICLE AD

Tata Altroz Rival Hatchback: டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ரோஸ் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் கிடைக்கும் கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்

டாடாவின் ஆல்ட்ரோஸ் கார் மாடலானது இந்திய சந்தையில் கிடைக்கும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி என பலதரப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதனால் வேறுபட்ட எரிபொருள் ஆப்ஷன்களை விரும்பும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. பாதுகாப்பு, ஸ்டைல் மற்றும் சொகுசு பயணத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரானது, பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகள், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வாய்ஸ் அசிஸ்டண்ட் சன்ரூஃப் ஆகிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஹேர்ச்பேக்கின் விலையானது, ரூ.6.30 லட்சம் தொடங்கி ரூ.10.51 லட்சம் வரை நீள்கிறது. அதிகபட்சமாக 26 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குகிறதாம்.

அதேநேரம், பல்வேறு காரணங்களால் இதற்கு நிகரான மாற்று கார் மாடலை நீங்கள் தேடினால், அதற்கான ஏராளமான வாய்ப்புகளும் உள்ளூர் சந்தையில் உள்ளன. இந்த பட்டியலில் மாருதியின் ஃப்ராங்க்ஸ், ஸ்விஃப்ட், பலேனோ, ஹுண்டாயின் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா ஆல்ட்ரோஸின் போட்டியாளர்கள்..

1. மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ்

மாருதி சுசுகி ஃப்ராங்க்ஸ் காரின் தொடக்க விலை ரூ. 6.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1.2-லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0-லிட்டர் டர்போ இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருப்பதோடு,பெட்ரோல் இன்ஜின் சிஎன்ஜி (CNG) விருப்பத்திலும் கிடைக்கிறது. டர்போ இன்ஜின் 98.7 hp சக்தியையும் 147.6 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 21.5 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 20.01 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஹுண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20, ரூ. 5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.  1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு, 5-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது iVT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது.. மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இந்த மாடல் 81.86 hp பவரையும், iVT டிரான்ஸ்மிஷனில் 86.79 hp பவரையும் வழங்குகிறது. இந்த கார் உருவாக்கும் ஒட்டுமொத்த டார்க் 114.7 Nm ஆகும். 16 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

3. மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

மாருதி சுசுகியின் மற்றொரு ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்ட் ரூ. 5.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன், சிஎன்ஜி ஆப்ஷனையும் வழங்குகிறது. ஸ்விஃப்ட், மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு (MT) 24.8 கிமீ/லி, ஆட்டோமேடட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு (AMT) 25.75 கிமீ/லி மற்றும் சிஎன்ஜி மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு (CNG MT) 32.85 கிமீ/கிலோ மைலேஜ் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

4. டொயோட்டா க்ளான்ஸா

டொயோட்டா க்ளான்ஸாவின் தொடக்க விலை ரூ. 6.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுவதோடு, சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. பெட்ரோல் பயன்முறையில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88.50 hp சக்தியையும், 113 Nm உச்சபட்ச டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு (MT) 22.35 கிமீ, ஆட்டோமேடட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு (AMT) 22.94 கிமீ, சிஎன்ஜி பயன்முறையில் ஒரு கிலோவிற்கு 30.61 கிமீ மைலேஜையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

5. மாருதி சுசூகி பலேனோ

மாருதி சுசூகி பலேனோ கார் மாடலானது 88.47 hp ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளதோடு, CNG ஆப்ஷனையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். 5-ஸ்பீட் MT உடன் இணைக்கப்பட்ட பெட்ரோல் வேரியன்ட் லிட்டருக்கு 22.35 கிமீ, 5-ஸ்பீட் ஆட்டோமேடிக் வேரியன்ட் லிட்டருக்கு 22.94 கிமீ மைலேஜையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.  CNG யூனிட்டைத் தேர்வுசெய்தால், 5-ஸ்பீடு MT ட்ரான்ஸ்மிஷனில் கிலோவிற்கு 30.61 மைலேஜ் வழங்குகிறதாம். இதன் ஆரம்ப விலை ரூ. 5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article