டாடா நிறுவனம் இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் பிரபலமான கார் நிறுவனம் ஆகும். பட்ஜெட் கார் முதல் சொகுசு கார் வரை பல அசத்தலான கார்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர்.

Tata Altroz:

சிறிய ரக காரான ஹேட்ச்பேக் ரக காரிலே பல அசத்தலான கார்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க கார் Tata Altroz ஆகும். ஒவ்வொரு நிறுவனமும் தனது கார்களுக்கு மாதாந்திர தள்ளுபடியை அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

83 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி:

அந்த வகையில் டாடா நிறுவனம் தனது Tata Altroz காருக்கு இந்த மாதம் சலுகையை அறிவித்துள்ளது. இந்த காருக்கு ரூபாய் 83 ஆயிரம் வரை நவம்பர் மாத சலுகையை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சலுகை நவம்பர் மாதம் வரை உள்ளது.

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சத்து 30 ஆயிரத்து 900 ஆகும். ஆன் ரோட் விலையாக ரூபாய் 7.56 லட்சம் தொடக்க விலை ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 13.13 லட்சம் ஆகும். தற்போது இந்த காருக்கு 83 ஆயிரம் சலுகை அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களின் பணத்தை சேமிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.50 லட்சம் ரூபாயாக ( எக்ஸ் ஷோரூம்) மாறியுள்ளது.

22 வேரியண்ட்:

பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்ட வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. டீசல் காருக்கு 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 22 வேரியண்ட் உள்ளது.

6 ஏர்பேக்குகள்:

இந்த காரில் 10.25 இஞ்ச் தொடு திரை உள்ளது. இதில் ஏராளமான வசதிகள் அடங்கியுள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் காராகவும் இது உள்ளது. 360 டிகிரி கேமரா இதில் உள்ளது. வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் இதில் உள்ளது. 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் கொண்டது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. இந்தியாவின் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட ஹேட்ச்பேக் காராக இந்த கார் உள்ளது. இந்த காரின் இருக்கைகளும் அதிநவீன வசதிகளை கொண்டது.

10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கார் வாங்க விரும்பும் பலரது தேர்வாக இந்த கார் உள்ளது. இந்த கார் பெட்ரோலில் 19.33 கி.மீட்டர் மைலேஜும், டீசலில் 23.64 கி.மீட்டர் மைலேஜும் தருகிறது. அதுவே, சிஎன்ஜி-யில் 26.2 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. டாடா ஆல்ட்ரோஸ் கார் எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி பனிமூட்ட விளக்குகள் கொண்டது.