Tamilnadu Roundup: ரூ.10 லட்சம் நிதியுதவி, 870 ஏக்கரில் திட்டம், மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - 10 மணி செய்தி

6 months ago 7
ARTICLE AD

சாலைவிபத்தில் உயிரிழக்கும் தி.மு.க உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600க்கு விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தனது 82வது பிறந்தநாளை ஒட்டி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த இசைஞானி இளையராஜா மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பொருள் விற்பனை செய்த 18,000 கடைகளுக்கு சீல்

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அமைய உள்ள அறிவுசார் நகருக்கான பணிகளை தொடங்கியது டிட்கோ

கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த சந்தோஷம், நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என பல உணர்வுகளுடன் மாணவர்கள் சங்கமம்

கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடக்கம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்

திருச்சி: மணப்பாறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பெருமாள் என்பவர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது

ராமேஸ்வரம் கோயிலில் ராமநிலிங்க பிரதிஷ்டையை ஒட்டிஜூன் 4இல் நடை அடைப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய  பால் வழங்கும் திட்டம் தொடங்கிவைப்பு

Read Entire Article