பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை. அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 72 ஆயிரத்து 720க்கு விற்பனை

உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தகவல்

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து

12 ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு - மாணவர்கள் பதிவிறக்கம் செய்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை– நகர விற்பனை குழுக்களுக்கு ஜூன் 26 இல் தேர்தல்

35 வருஷ அரசியலை, நீங்க 2 நிமிஷத்துல சொல்லிடுறீங்க - ராப் பாடகர் வேடனுடன் விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ காலில் பேச்சு

பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் இரண்டாவது கட்டமாக இன்று மாணவர்களை பாராட்டி விருதுகளை வழங்குகிறார்

சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்' அமைக்கும் பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சம் - கடந்த மே மாதம் மட்டும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 493 டிக்கெட்டுகள் புக்கிங்

சினிமா பாடலாசிரியர் பா.விஜய் மீது பெண் பண மோசடி புகார்

”விஜயின் வருகை இளைஞர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்... அவருக்கு நிறைய செல்வாக்கு இருக்கு”... காளியம்மாள் கருத்து