Tamilnadu Roundup: தமிழக அரசின் புதிய கணக்கெடுப்பு, தவெக மதுரை மாநாடு, தங்கம் விலை - 10 மணி செய்திகள்

3 months ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டம் - புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருக்கைக்கான காரணம், பணி, வாழ்கை நிலை, சுகாதார நிலை குறித்து தொழிலாளர் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்த திட்டம்

மதுரையில் இன்று நடைபெறும் தவெக மாநாட்டிற்காக குவியும் தொண்டர்கள் - அவசர மருத்துவ உதவிக்காக 100க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

“புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட நமது தலைவர்களின் படத்தை போட்டுதான் கட்சியை தொடங்கும் சூழ்நிலை உள்ளது” - மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டு திடலில் எம்.ஜி.ஆர். படம் இடம் பெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி மறைமுக விமர்சனம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73,840க்கு விற்பனை - ஒரு கிராம் விலை ரூ.9,230 ஆக நிர்ணயம்

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் - நாளை முதல் வரும் செப்.21ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் நவ.9ம் தேதி எழுத்துத் தேர்வு.

ஆவணி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பணத்துக்காக பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் சுகுமார் கைது. ஆளில்லா வீடுகளை ஒருநாள் வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் நடத்திவந்த 5 புரோக்கர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவர் கைத

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆண்டுகளை விட அதிகரிப்பு - கடந்த மாதம் 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் கலந்தாய்வில் 1.45 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன

Read Entire Article